“லேடி சூப்பர் ஸ்டாரின்” அடுத்த படம்… என்னன்னு தெரியுமா?…. வைரலாகும் பட டீசர்….!!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரின் நடிப்பில் வெளியான காத்துவாக்குல இரண்டு காதல் படத்தை தொடர்ந்து ஓ2 என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை ஜி.கே.விக்னேஷ் என்பவர் இயக்கி ஒடிடி தளத்தில் வெளியிட இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்த படக்குழு, இறுதிகட்ட பணிகள் தீவிரம் நடைபெற்று வருகிறது.

இந்த ஓ2 திரைப்படம், விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் சக பயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்று கதையை பரபரப்பாக எடுத்து தமிழ்நாடு,கேரளா மலைப்பகுதியில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அம்மா பார்வதி கதாபாத்திரமாக நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *