“லூசு மாதிரி பேசாதீங்க”…. பொங்கி எழுந்த ஜனனி…. கோபத்தில் சரமாரியாக பேசிய அசீம்…. முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் வாக்குவாதம்….!!!!

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 14 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 50 நாட்களைக் கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் காரசாரமாக பேசினார். இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவராக அசீம் இருந்து வரும் விலையில் நேர்வழி தினத்தில் வீக்லி டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதாவது ஏலியன்கள் மற்றும் பழங்குடி மக்கள் என்ற தலைப்பில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பழங்குடி மக்கள் அதிசய கிணற்றை ஏலியன்கள் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் டாஸ்க். இந்நிலையில் ஜனனி ஏலியனாக இருக்கும் நிலையில் பழங்குடி மக்களாக இருக்கும் அசீம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஜனனி லூசு மாதிரி பேசாதீங்க என பேசியதால் அசீம் கோபமடைந்து ஜனனியை சரமாரியாக பேசியுள்ள நிலையில் அந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.