லிஸ்ட் ரெடி.. கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம்…. பட்டியல் வெளியீடு…!!!

கர்நாடகா அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்ய உள்ளதாக காங்கிரஸ் கட்சி தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் முதல்வருடன் எட்டு பேர் அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மொத்த அமைச்சரவையில் 24 அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என தெரிகிறது. அதன்படி தினேஷ் குண்டு ராவ், மகா தேவப்பா உள்ளிட்ட 24 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை 11.45 மணிக்கு அமைச்சர்களுக்கான பதவி பிரமாண நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

Leave a Reply