மும்பையில், நடுத்தர வயது துணையை (லிவ்-இன் உறவு) கொன்று 20 துண்டுகளாக வெட்டி குக்கரில் சமைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

36 வயது வாழ்க்கை துணையை கொன்று, உடலை 20 துண்டுகளாக வெட்டி, குக்கரில் சமைத்து நாய்களுக்கு உணவளித்த முதியவரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை மீரா ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மனோஜ் ஷஹானே (56) போலீஸ் காவலில் உள்ளார். இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக கீதா நகரில் உள்ள ஆகாஷ் டீப் பில்டிங்கின் ஏழாவது மாடியில் லிவ்-இன் உறவில் வசித்து வந்தனர். நேற்று மாலை அந்த குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசியது குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த வீட்டில் இருந்து அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்டன. மனோஜின் பார்ட்னரான சரஸ்வதி வைத்யாவைக் கொன்ற பிறகு, விறகு வெட்டும் கருவியைப் பயன்படுத்தி உடலை 20-க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டியதாக போலீஸார் தெரிவித்தனர்.

பின்னர் உடல் உறுப்புகளை குக்கரில் வைத்து சமைத்து, பிளாஸ்டிக் பையில் போட்டு தூக்கி வீசினர். அந்த வீட்டில் இருந்து 12 உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் விசாரணைக் குழுவினர் மீட்டுள்ளனர். துண்டாக்கப்பட்ட உடல் உறுப்புகளை குக்கரில் சமைத்து நாய்களுக்கு உணவாகக் கொடுத்ததாக மும்பை காவல்துறையை மேற்கோள் காட்டி ஃப்ரீ பிரஸ் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

இருவருக்குமிடையே தகராறு இருந்ததாகவும், அப்போது மனோஜ் சாஹ்னி சரஸ்வதியை கொன்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாக துணை போலீஸ் கமிஷனர் ஜெயந்த் பாஜிபாலே தெரிவித்தார். கொலைக்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக டிசிபி தெரிவித்தார்..