தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்ததாக சென்னையில் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிக்கிறார். லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகிவரும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.
இந்நிலையில் லியோ படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்வினை மாநிலத்தின் தென் பகுதிகளில் வைக்க விஜய் விரும்புவதாக தயாரிப்பாளர் லலித் கூறியிருக்கிறார். மதுரை, திருச்சி அல்லது கோயம்புத்தூரில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விஜய் பொது நிகழ்ச்சியில் தலைகாட்டுவது அவரது படத்தின் பாடல் வெளியீட்டில் மட்டும்தான். இதனால் தென் மாவட்ட ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.