லியோ படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்?…. வெளிவரும் புது தகவல்கள்…..!!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “லியோ”. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். இதில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதற்கட்ட சூட்டிங் காஷ்மீரில் நடந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன் லியோ படக்குழுவினர் தங்கியிருந்த ஹோட்டல் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக படக்குழுவினர் அவசரஅவசரமாக வெளியேறினர். அப்போது வெளியில் வந்தவர்களில் லோகேஷ் கனகராஜ், பிரியா ஆனந்த், கதாசிரியர் ரத்தினகுமார் போன்றோருடன் நடிகர் கதிரும் இருந்தார். இதுவரையிலும் கதிர் லியோ படத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. தற்போது அவர் லியோ படக்குழுவினருடன் தங்கி இருப்பது இப்படத்தில் அவர் நடிப்பதை உறுதி செய்திருக்கிறது.