“லிப்” சர்வீஸ் மட்டுமே செய்து வருபவர் கமலஹாசன்…. வானதி சீனிவாசன் விமர்சனம்..!!

லிப் சர்வீஸ் மட்டும் செய்து வருபவர் கமலஹாசன் என்று வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியாக சென்று மற்ற கட்சியை சேர்ந்தவர்களை சாடிப் பேசி வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

அதே தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுகின்றார். அங்கு பிரச்சாரம் மேற்கொண்ட வானதி ஸ்ரீனிவாசன் உதட்டளவிலும், உதடுகளுக்கும் “லிப்” சர்வீஸ் மட்டுமே செய்து வருபவர் நடிகர் கமலஹாசன் என்று கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.