தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் பாலிவுட் சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது தமிழில் பட வாய்ப்புகள் போதிய அளவு இல்லாத நிலையில், தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் வர்மா மற்றும் தமன்னா பல இடங்களுக்கு ஒன்றாக சேர்ந்து சுற்றி வருகிறார்கள். இந்நிலையில் நடிகை தமன்னா கோவாவில் நடிகர் விஜய் வர்மாவுடன் சேர்ந்து புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.

அங்கு நடைபெற்ற இரவு நேர பார்ட்டியில் நடிகை தமன்னா பிங்க் நிறத்தில் மினுமினுக்கும் ஒரு கவர்ச்சி உடையை அணிந்திருக்கிறார். புத்தாண்டு பிறந்ததும் அனைவரும் ஹேப்பி நியூ இயர் என்று கத்திய போது எடுக்கப்பட்ட வீடியோவில் நடிகை தமன்னா மற்றும் நடிகர் விஜய் வர்மா ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து லிப் லாக் முத்தம் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ பர்பிள் மார்டினி என்ற என்ற பெயரில் கோவாவில் உள்ள ஒரு உணவகத்தால் பகிரப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மா காதலிப்பது உறுதியாகிவிட்டதாக பரபரப்பாக பேசி கொள்கிறார்கள்.