
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் கடந்த சில தினங்களாக காட்டுத்தீ ஏராளமான இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த காட்டுத்தீக்கு 25 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இந்த காட்டுத்தியால் 23 ஆயிரத்துக்கும் அதிகமான பரப்பு எரிந்து சேதம் ஆகி உள்ளது.
இந்நிலையில் அமெரிக்க டென்னிஸ் வீரரான டெய்லர் பிரிட்ஸ் தான் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற 71 லட்சம் ரூபாய் பணத்தை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் நிவாரண பணிக்காக வழங்கியுள்ளார். தான் வளர்ந்த ஊருக்கு தன்னால் முடிந்ததை செய்துள்ளதாகவும் பலரும் மக்களுக்கு உதவ முன் வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.