லாரி-அரசு பேருந்து மோதல்…. டிரைவர், கண்டக்டர் உள்பட 14 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

லாரியும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 பேர் காயமடைந்தனர்.

பெங்களூரில் இருந்து அரசு பேருந்து விருதாச்சலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிட்டப்பள்ளி தனியார் பள்ளி அருகே அதிகாலை 2 மணி அளவில் சென்றபோது ஊத்தங்கரை நோக்கி வந்த லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இதனால் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர்.

இந்த விபத்தில் வாகனங்களின் முன்பகுதி சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேருந்து டிரைவர், கண்டக்டர் உட்பட காயமடைந்த 14 பேரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.