ராகுல் காந்தி தைத்த செருப்பு லட்சக்கணக்கில் விலை போவதாக செருப்பு தைக்கும் தொழிலாளி மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூருக்கு கடந்த 26 ஆம் தேதி ராகுல் காந்தி சென்றிருந்தார். அப்போது ராம்சேட் என்ற செருப்பு தைக்கும் தொழிலாளியின் கடைக்குச் சென்ற ராகுல் காந்தி தொழிலாளியிடம் பேசினார்.

காலணி தைக்க கற்றுக்கொண்ட அவர் செருப்பு தைக்கும் மிஷினை பரிசளித்தார். இந்நிலையில் ராகுல் காந்தி தைத்த காலணியை பலரும் ஆர்வம் காட்டி வருவதாக செருப்பு தைக்கும் தொழிலாளி மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ஆனால் அதை விற்க விரும்பவில்லை என்றும் நான் உயிருடன் இருக்கும் வரை கோடி கொடுத்தாலும் அந்த காலணியை யாருக்கும் கொடுக்க மாட்டேன் எனவும் ராம்சேட் தெரிவித்துள்ளார்.