ரோப் கார் விபத்து…. ஒன்றோடு ஒன்று மோதல்…. வைரலாகும் வீடியோ….!!!!

மலை உச்சியில் ரோப் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் காட்சிகள் தற்போது சமூக தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகர் மாவட்டத்தில், சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றான பாபா வைத்தியநாத் கோவில் உள்ளது. இந்த கோவிலானது திரிகுட்  மலை மீது உள்ளதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்
இந்த கோவிலுக்கு தரிசனம் செய்யும் வசதியாக மாநில சுற்றுலாத்துறை சார்பில் ரோப்கார் வசதி செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இது இந்தியாவிலேயே மிக உயரமான செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ள ரோப்கார் ஆகும்.
மேலும் இந்த ரோப்காரானது 766 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 1500 அடி உயரம் கொண்டது, திரிகூட மலை. இந்த நிலையில் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் உட்பட 40க்கும் அதிகமானோர் ரோப் கார்கள் மூலம் இக்கோவிலுக்கு பயணம் செய்துள்ளனர். அப்போது மலை உச்சியில் இந்த ரோப் காரில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் நடுவழியில் அந்தரத்தில் அனைத்து கார்களும் சுமார் 100 அடி உயரத்தில் நின்றுவிட்டது. இதையடுத்து மீட்பு பணிக்காக 2 ஹெலிகாப்டர்களில் வந்த விமானப்படையினர், தொடர்ந்து 44 மணி நேர மீட்புப் பணியில் ஈடுபட்டு ,இதுவரை 40 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் விபத்து ஏற்பட்டு ரோப் காரில் பயணம் செய்து பயணி ஒருவர் எடுத்த வீடியோவில் ரோப் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் காட்சிகள் பதிவாகி, தற்போது அந்த வீடியோவானது சமூக தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Footage of Deoghar Ropeway Accident

10-04-2022 4:30pm#Jharkhand#Deoghar#DeogharRopewayAccident#DeogharAccident#PMModi#IAFpic.twitter.com/GvdoIfIh4Q

— Purushottam Keshri (@k_puru30) April 12, 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *