ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. சோதனையில் தெரிந்த உண்மை…!!!

புகையிலை பாக்கெட்டுகளை கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முகையூர் ரயில் நிலைய பகுதியில் அரக்கண்டநல்லூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஏமாப்பூர் கிராமத்தை சேர்ந்த கருணாகரன் மற்றும் பார்த்திபன் என்பது தெரியவந்தது.

இருவரும் மோட்டார் சைக்கிளில் புகையிலை பாக்கெட்டுகளை கடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் கருணாகரன் மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 305 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.