ரொம்ப கஷ்டமா இருக்கு… அழுகையா வருது… குக் வித் கோமாளி பிரபலம் வருத்தத்துடன் வெளியிட்ட பதிவு…!!!

குக் வித் கோமாளி பிரபலம் புகழ் வருத்தத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கலகலப்பாக நடைபெற்று வந்த குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் செலிபிரிட்டி சுற்று நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வந்திருந்தனர் . இதையடுத்து இறுதிப் போட்டி ஒளிபரப்பாக உள்ளது . இறுதிப் போட்டிக்கு அஸ்வின், கனி, பாபா பாஸ்கர், சகிலா, பவித்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .

இவர்களில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார்? என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர். சமீபத்தில் இறுதிப்போட்டிக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது . ஆனால் வெற்றியாளர் யார் என்ற தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் வருத்தத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது கஷ்டமாக இருக்கிறது, அழுகையா வருது’ என பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வருவதால் ரசிகர்களுக்கும் வருத்தத்தில் உள்ளனர் .