ரேஷன் கடையின் கதவை உடைத்த கரடி…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கரடி ரேஷன் கடையின் கதவை உடைத்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வனப்பகுதியில் வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பேரட்டி பகுதிக்குள் நுழைந்த கரடி ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது. இதனை அடுத்து கரடியால் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வைத்திருந்த உட்புற கதவை உடைக்க முடியாததால் அங்கிருந்து சென்றது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பொது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.