ரேஷன் கடைகளில் இதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் அட்டை வைத்துள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டமும் பல மாநிலங்களில் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எந்த ஒரு மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் கைரேகையை பதிவு செய்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.

அதேசமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.ரேஷன் கடைகளில் மக்கள் விரும்பும் பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் எச்சரித்துள்ளார்.விருப்பம் இல்லாத பொருட்களை வாங்க மக்களை கட்டாயப்படுத்தினால் ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் ரேஷன் கடைகளில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் குறைகள் குறித்து 1967 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.