ரேஷன் அரிசி கடத்த முயற்சி… பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை… வாலிபர் கைது…!!

கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 1 1/2டன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்துவது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெரியகுளம் அருகே உள்ள வடகரையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக உத்தமபாளையம் பறக்கும்படை துணை தாசில்தாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில் துணை தாசில்தார் கண்ணன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் வடகரைக்கு சென்று அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதி வழியாக வந்த ஜீப் ஒன்றை நிறுத்து சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் 1 1/2 டன் அரிசி கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்துள்ளது.

மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து ஜீப்பை ஓட்டி சென்ற வடக்குபட்டியில் வசித்து வரும் சுகந்தன் என்ற வாலிபரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரிசியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் அதனை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *