தமிழகத்தில் ரேஷன் அட்டையில் பெயரிடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகை சரிபார்ப்பை உடனே மேற்கொள்ள வேண்டும் எனவும் இல்லை என்றால் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கப்படும் எனவும் தகவல் வெளியானது. இது தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கைவிரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளவில்லை என்றால் பெயர் நீக்கப்படும் என்பதோ அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படாது என்பதோ தவறான தகவல் என்று மறுப்பு தெரிவித்துள்ளது.