
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு நாளையுடன் முடிவடைகிறது.
அதன்படி ஜனவரி 12ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் நாளை நிறைவடைவதால் ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசை நாளை சென்று பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் டோக்கன் பெறாதவர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று கூட பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம்.