தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறை தீர் முகாம் நடைபெறும் நவம்பர் 2024-ஆம் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகம் வருகிற ஒன்பதாம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை சென்னையில் இருக்கும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பங்கேற்று குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ளலாம். நியாய விலை கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று கொடுக்கப்படும். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் இருந்தாலும் மக்கள் இந்த முகாமில் பங்கேற்று அதற்கு தீர்வு காணலாம் என கூறப்பட்டுள்ளது.