இந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் மூலமாக உணவு தானியங்கள் குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டுகள் பயனாளிகளுக்கு தகுந்த சலுகைகளையும் உள்ளடக்கி இருப்பதால் ஐந்து வெவ்வேறு வகையான ரேஷன் கார்டுகள் NFSA மற்றும் TPDS ன் கீழ் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறியதாவது, நாடு முழுவதும் 55 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை 75 ஆயிரத்து 689 போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் சத்வி நிரஞ்சன் ஜோதி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதில் அதிகமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் 921175 ரேசன் அட்டைகளும், பீகார் மாநிலத்தில் 426865 ரேஷன் அட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
PHH முன்னுரிமை குடும்ப ரேஷன் கார்டு.
இந்த அட்டை அந்தந்த மாநில அரசுகளால் நிர்ணயிக்கப்பட்ட தகுதி அளவு கோள்களை வைத்து குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்பமும் ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்களை பெறுவதற்கான உரிமை உள்ளது.
AYY அந்த்யோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டு.
இந்த ரேஷன் கார்டை வைத்திருக்கின்ற ஒவ்வொரு குடும்பமும் மாதம் ஒன்றுக்கு 35 கிலோ உணவு தானியங்கள் பெறுவதற்கு உரிமை உள்ளது.
APL ரேஷன் கார்டு.
இந்த அட்டை வறுமை கோட்டிற்கு மேல் வாழும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
BPL ரேஷன் கார்டு.
இந்த அட்டை வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.
AY அன்னபூர்ணா யோஜனா ரேஷன் கார்டு.
இந்த அட்டை ஏழை மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களுக்கு வழங்கப்படுகிறது.