இந்தியாவின் பண வீக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த பணவீக்கமானது ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட அதிகரித்து செல்வதால், பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மே மாதம் முதல் ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் ரெப்போ வட்டி விகிதம் 0.40 புள்ளிகள் உயர்ந்ததால், 4.40% வட்டி விகிதம் அதிகரித்தது. இதேபோன்று கடந்த ஜூன் மாதம் 0.50% அதிகரித்ததால், 4.9% வட்டி விகிதம் அதிகரித்தது.
இதனையடுத்து ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பிபிஎஸ் 50 சதவீதம் உயர்த்தப்பட்டதால், தற்போது 5.4 சதவீதமாக வட்டி விகிதம் இருக்கிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியில் ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 0.5% உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் சில்லறை பணவீக்கம் 7 சதவீதம் அதிகரித்ததால் அதை கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.