ரெப்போ வட்டி விகிதம் உயர்வு… ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால வட்டி விகிதத்தை 0.35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பதால் வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் வங்கிகளில் வாடிக்கையாளர்களின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்தி தாஸ் கூறியதாவது, ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. ஏனென்றால் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே வருடத்தில் 5-வது முறையாக பணவீக்கம் காரணமாக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி ரெப்கோ ரேட் விகிதத்தை 0.35 சதவீதம்  அதிகரித்து 6.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்நிலையில் வட்டி விகிதத்தை அதிகரித்திருப்பதால் வங்கி கடன் பெறும் பொதுமக்கள் தாங்கள் வாங்கிய தனி நபர் கடன், வீடு, வாகனம் போன்றவற்றிற்கான கடன்களுக்கு கூடுதல் வட்டி கட்ட வேண்டிய நிலை ஏற்படும்.