சினிமா என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குறிப்பாக தியேட்டர்களில் சென்று படம் பார்க்கும் அனுபவமே தனி ரகம் தான். இதனால் சில நேரங்களில் ரசிகர்களை கவரும் விதமாக டிக்கெட் விலையில் தள்ளுபடி, பெண்களுக்கு கட்டண குறைவு என தியேட்டர்கள் சலுகைகளை அறிவிப்பது வழக்கம். சென்னையைப் பொறுத்தவரை சில திரையரங்குகளில் வாரத்தில் ஒரு நாள் கட்டணம் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பிரபல மல்டிபிளக்ஸ் PVR, சினிமா பிரியர்களுக்கு பம்பர் சலுகையை அறிவித்துள்ளது. ஜனவரி 20ஆம் தேதி ‘Cinema lovers Day’ அன்று படத்தை ரூ. 99க்கு பார்க்கலாம். இது சலுகை அனைத்து படத்திற்கும், அனைத்து ஷோவிற்கும் பொருந்தும். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் டிக்கெட்டிற்கு 100+GST வசூலிக்கப்படும். பிரீமியம் வகை இருக்கைகள் இந்த சலுகையின் கீழ் வராது என்பதை PVR தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.