சென்னை புரசைவாக்கம் ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்..
சென்னை புரசைவாக்கத்தில் இயங்கி வரும் ரத்னா ஸ்டோர்ஸ் ஜவுளி கடையின் உரிமையாளர் சிவசங்கர் நேற்று தூத்துக்குடி போலீசாரால் கடையிலிருந்து தூத்துக்குடிக்கு அழைத்து செல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்யப்பட்டு பின்பு கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் இயங்கி வரும் ராஜம் பைனான்ஸ் இன்ஸ்டிடியூட்டில் 60 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால் அந்த ராஜம் பைனான்ஸ் சார்பில் பிரபாகரன் என்பவர் கொடுத்த புகாரின் காரணமாக ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளரை நேற்று சென்னைக்கு வந்து தூத்துக்குடி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு பின்பு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்..
ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் மட்டுமில்லாமல் அவருடைய மனைவி வாசுகி 2 பேருமே கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பேரிடமும் விசாரணை செய்தநிலையில் கடைசியாக ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் தூத்துக்குடி போலீசார்.. இவர் 60 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய பத்திரமும் இவரிடம் இருப்பதாகவும், கடன் ஆவணங்களும் இவரிடம் இருப்பதாகவும் கைது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி போலீசார் அழைத்துச் சென்று தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் 60 லட்சத்திற்கும் மேல் இவரது மனைவியும், அவரும் சேர்ந்து இவர் கொடுத்த உறுதிப்பத்திரம் அனைத்தையும் கடன் கொடுத்தவரிடம் மிரட்டி அதனை பெற்றுக் கொண்டு, எந்த கடனையும் அடைக்காமல் வட்டியும் கொடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்த காரணத்தால் கடன் கொடுத்த நிறுவனமான ராஜம் பைனான்ஸ் இன்ஸ்டிட்யூட் பிரபாகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் பல மாதங்களாக விசாரணை செய்து சம்மன் அளித்தும் ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் நேரில் ஆஜராகாவில்லை.
இதன் காரணமாக நேற்று சென்னைக்கு வந்து புரசைவாக்கத்தில் இருக்கக்கூடிய ரத்னா ஸ்டோர்ஸ் கடையில் உட்கார்ந்து இருக்கும்போது சிவசங்கர் மற்றும் அவரது மனைவி வாசு 2 பேரையும் காரில் அழைத்து சென்று தூத்துக்குடி அழைத்து வந்து, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று காலை தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு சிவசங்கர் மீது மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவரது மனைவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேறு எங்கேயும் கடன் வாங்கி உள்ளாரா என்றும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது..