பொதுவாக சொந்த தொழில் துவங்க நிறைய பணம் தேவை என ஏராளமானோர் நினைக்கின்றனர். ஆனால் சிறு முதலீட்டில் கூட அதிகமான பணம் சம்பாதிக்கலாம். அந்த வகையில் நாம் பார்க்கப்போவது வணிகம் மொபைல் ஆக்சஸரீஸ் பிசினஸ். அதிகரித்து வரக்கூடிய டிஜிட்டல் மயமாக்கலுடன் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடும் மிகவேகமாக அதிகரித்து உள்ளது. இத்தகைய நிலையில் மொபைல் மற்றும் அதுகுறித்த பாகங்களுக்கு சந்தையில் அதிக தேவை இருக்கிறது. இந்த வணிகத்தின் சிறப்பு என்னவெனில், இது சீசன் பிஸினஸ் இல்லை.

இந்த பிஸினஸ் ஆண்டின் 12 மாதங்களிலும் உங்களுக்கு லாபத்தை அளிக்கும். ஸ்மார்போன் பயன்படுத்துப்பவர்களுக்கு பல்வேறு அசஸெரீஸ் தேவை. சார்ஜர், இயர்போன், ப்ளூடூத் ஸ்பீக்கர், மொபைல் ஸ்டாண்ட், சவுண்ட் ஸ்பீக்கர் ஆகிய பல்வேறு விஷயங்கள் தேவைப்படுகிறது. இதையெல்லாம் விற்று நன்றாக சம்பாதிக்கலாம். மொபைல் ஆக்சஸரீஸ் தொழிலை துவங்க நீங்கள் அதிக முதலீடு செய்ய வேண்டியதில்லை. ரூபாய்.5,000 -10,000 வரை இருந்தாலே இதனை துவங்க முடியும். ஒரே சமயத்தில் பல பொருட்களை வாங்காமல், ஒவ்வொரு வகையிலும் கொஞ்சம் கொஞ்சமாக பொருட்களை வாங்குங்கள்.

அதன்பின் வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் சந்தையின் தேவைக்கேற்றவாறு பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். இத்தொழிலை தொடங்க பெரிய கடை எதுவும் தேவை இல்லை. சாலையோர கடையிலிருந்தும் இத்தொழிலை தொடங்கலாம். மேலும் பகுதி நேரமாகவும் இத்தொழிலை துவங்கலாம். மொபைல் பாகங்கள் வணிகம் உங்களுக்கு மிகவும் இலாபகரமான வணிகம் ஆகும். இத்தொழிலில் மாதந்தோறும் முதலீட்டில் 3 -4 மடங்கு அதாவது 40,000 முதல் 50,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். இவ்வணிகத்தில் வருமானம் 3 முதல் 4 மடங்கு வரை இருக்கலாம். அத்துடன் இத்தொழிலில் வருமானம் அதிகரிக்கும்போது, ​​நீங்கள் அதனை பெரிய அளவில் துவங்கலாம். வருமானம் பெருகபெருக திட்டம் தீட்டி தொழிலை விரிவுபடுத்தலாம்.