ரூ.2500 கொடுப்பதில் எந்த தவறும் இல்லை… நடிகை குஷ்பு பேட்டி…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப் படுவது வழக்கம். அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள். மக்களின் தேவையை உணர்ந்து தமிழக அரசு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் பணத்தை வழங்கி வந்தது.

இந்நிலையில் இந்த வருடம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து 2.06 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணம் rs.2500 வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் பொங்கல் பரிசு ரூ.2500 கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய அவர்களுக்கு பொங்கல் பரிசு தரப்படுகிறது எனக் கூறிய அவர், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று கமல் அறிவிப்புக்கும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.