ரூ.2000 நோட்டை கள்ளநோட்டா என அறிவதற்கும், அதன் உண்மை தன்மையை சரிபார்ப்பதற்கும் ரிசர்வ் வங்கியானது புது வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து உள்ளது. ரூபாய். 2000 நோட்டை சரிபார்ப்பது எப்படி என்பது குறித்து நாம் தெரிந்துகொள்வோம்.
2000 எண்ணை படத்தில் சுட்டிக்காட்டி இருக்கும் இடத்தில் சரிபார்க்க வேண்டும். தேவநாகரி எழுத்துருவில் 2000 என்ற எண் குறிக்கப்பட்டு இருக்கும். மையத்தில் மகாத்மா காந்தியின் உருவப் படம் இருக்கும். மைக்ரோ எழுத்துக்கள் வாயிலாக இந்தியில் भारत (பாரத்) மற்றும் ஆங்கிலத்தில் India (இந்தியா) என குறிப்பிடப்பட்டு இருக்கும். அதோடு ரூபாய் நோட்டை சாய்த்துப்பார்த்தால் மறைமுக எழுத்துகளின் நிறத்தில் மாற்றம் நிகழும். பாதுகாப்புகாக கொடுக்கப்பட்ட பச்சைநிற கோடு, பச்சை நிறத்திலிருந்து நீலமாக மாறும். மகாத்மா காந்தியின் உருவப்படத்தின் வலது புறத்தில் உறுதி மொழிப் பிரிவு மற்றும் ரிசர்வ் வங்கியின் சின்னத்துடன் ஆளுநரின் கையொப்பம் இருக்கும்.
பார்வையற்றோருக்கான சில அம்சங்கள்
மகாத்மா காந்தியின் உருவப்படம்(4), அசோக தூண் சின்னம்(11), வலது புறம் கிடைமட்ட செவ்வகத்தில் ரூ.2000 எண், இடது, வலது பக்கங்களில் 7 கோண கோடுகள் இருக்கும். இடது புறத்தில் நோட்டு அச்சடிக்கப்பட்ட வருடம் இருக்கும். இந்திய மொழிகளின் பெயர் இடம்பெறும். மங்கள்யானின் மையக் கருத்து.