ரூ.2000 நோட்டுகளை மாற்ற வங்கிக்கு போறீங்களா?…. அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!

மே 23-ம் தேதி முதல் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்திருக்கிறது. ரூ.2000-ஐ வங்கிகளில் டெபாசிட் (அ) பரிமாற்ற பான் (அல்லது) ஆதார் போன்ற அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமா என்ற குழப்பம் மக்களிடையே இருந்து வருகிறது. ரூ.2000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யும் போது கவனிக்க வேண்டியவை குறித்து நாம் தற்போது தெரிந்துகொள்வோம்.

அதாவது, வாடிக்கையாளர்கள் ரூ.2,000 நோட்டுகளை ரூ.50,000-க்கு மேல் டெபாசிட் செய்ய பான் கார்டு எண் வைத்திருக்கவும். ரூ.2,000 நோட்டுகளை மாற்றும் விஷயத்தில் வங்கிகள் தங்களது சொந்த செயல்முறை மற்றும் விதிகளை பின்பற்றும் என ரிசர்வ் வங்கியானது தெரிவித்து உள்ளது. ஒரு வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் செலுத்தக்கூடிய டெபாசிட்டுக்கு வரம்பில்லை மற்றும் டெபாசிட்களுக்கு கேஒய்சி விதிமுறைகள் பொருந்தும்.

வங்கிக் கணக்குகளில் ரூ.50,000 (அ) அதற்கு மேற்பட்ட டெபாசிட்களுக்கு பான் கார்டை வழங்கவும். இதே முறையானது ரூ.2000 நோட்டுகளுக்கும் பொருந்தும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், ஒரு நபர் ஒரே சமயத்தில் ரூ.20,000 வரையிலும் மாற்றிக்கொள்ள இயலும்.