ரூ.19,675,00,00,000 செலவிட்டு… பொறுமை காத்த மோடி அரசு… அரசியல் செய்த காங்கிரஸ் …!!

செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் நாராயணன் திருப்பதி, சென்ற ஜனவரி 16 ஆம் தேதி நாம் முதலில் இதை துவக்கினோம். சுகாதாரப் பணியாளர்கள், அதன் பிறகு முன் களப்பணியாளர்கள், அதன்பிறகு 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 45 வயது மேற்பட்டவர்கள் என்று சொல்லி, இன்றைக்கு கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் மேலான 15 முதல் 18 வயதிற்கு உள்ளாக அதாவது இந்த ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து இவ்வளவு 15 நாட்களுக்குள்ளேயே 50 விழுக்காட்டிற்கும் மேலான இளைஞர் சமுதாயத்திற்கு நாம் இந்த தடுப்பூசியை செலுத்தி இருக்கிறோம் என்பது ஒரு அற்புதமான விஷயம்.

வரக்கூடிய காலங்களிலேயே குறுகிய காலத்திலேயே பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நம்முடைய நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சிறு குழந்தைகளுக்கும் கூட இந்த தடுப்பூசியை செலுத்தக்கூடிய ஒரு ஆய்வை மேற்கொண்டு விரைவில் அதையும் நாம் செய்வோம். ஆனால் இந்த அற்புதமான விஷயங்களை நிகழ்த்திக் காட்ட இருக்கக்கூடிய இந்த நேரத்திலே கடந்த ஒரு வருடத்தில் எதிர்க்கட்சிகள் குறிப்பாக அகில இந்திய அளவில் சொல்ல வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தடுப்பூசி விவகாரத்தில் மலிவான அரசியலை செய்து கொண்டிருந்தது.

பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார்கள், வேண்டுமென்றே தடுப்பூசி குறித்த பல விமர்சனங்களை செய்தார்கள், இந்த தடுப்பூசி சரியாக செயல்படுமா என்று கேட்டார்கள், இருந்தபொழுது எப்படி இவ்வளவு இருக்கிறது மக்களுக்கு செலுத்த முடியவில்லை என்று கேட்டார்கள், தயாரிப்பிலேயே உற்பத்தியிலே குறையும் பொழுது ஏன் உற்பத்தி குறைகிறது என்று கேட்டார்கள்,

இப்படி எடுத்ததற்கெல்லாம் ஒரு பிரச்சனையை கிளப்பி கொண்டு இருந்தாலும்கூட அதற்கெல்லாம் பொறுமை காத்து இன்றைக்கு நம் நாட்டு மக்கள் அனைவருக்குமே இது சரியாக சென்று சேரும் வண்ணம் ஒரு சிறப்பான விஷயத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.கடந்த மாதம் வரையில் கிட்டத்தட்ட 19 ஆயிரத்து 675 கோடி ரூபாய் இந்த தடுப்பூசியை நாம் தடுப்பூசி வாங்குவதற்கு மட்டும் அதாவது அந்த நிறுவனங்களிலிருந்து வாங்குவதற்கு மட்டும் செலுத்தி இருக்கிறோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *