“ரூ.‌ 1000 கோடியா” கபாலி படம் பற்றி பிரபல தயாரிப்பாளர் சொன்ன விஷயம்….‌ ஆச்சரியத்தில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் கபாலி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்க, கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, நடிகை தன்ஷிகா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி,  கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்த விமர்சனங்களால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக பா. ரஞ்சித் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று திரையரங்குகளில் நானே வருவேன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் கலைபுலி எஸ். தாணு பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அப்போது ஒரு பேட்டியில் கபாலி படத்தின் வசூல் குறித்து கேட்கப்பட்டது. அவர் கூறியதாவது, கபாலி படம் அமெரிக்காவில் மட்டுமே 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. அதேபோன்று கபாலி படத்தின் வசூல் 1000 கோடி ஆகும். வெளிநாட்டு வசூலால் படத்திற்கு நல்ல லாபம் கிடைத்தது என்று கூறினார். மேலும் கலைப்புலி எஸ். தாணு கபாலி படத்தின் வசூல் குறித்து கூறியது ரசிகர்கள் மத்தியில் தற்போது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.