ரூபாய் நோட்டுகளில் பலரும் பெயர்கள், எண்கள் போன்றவற்றை எழுதி வைப்பதை நாம் பார்த்திருப்போம். இப்படி ரூபாய் நோட்டுகளில் அவ்வாறு எழுதினால் அந்த நோட்டு செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்ததாக இணையதளத்தில் கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசின் PIB Fact Check இணையதளமானது, அந்த தகவலில் உண்மை இல்லை என தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி அத்தகைய வழிகாட்டுதல்களை வெளியிடவில்லை. ஆனாலும் ரூபாய் நோட்டுகளில் எழுதினால் நோட்டின் ஆயுள் குறையும் என தெரிவித்துள்ளது.