ராஜஸ்தான் மாநிலத்தில் கனமழையின் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சம்பவநாளன்று பைரவா(26) என்ற வாலிபர் ஒருவர் அவரது நண்பர்களுடன் மேனல் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளார்.

அப்போது அங்கு நண்பர்களுடன் ரீல்ஸ் செய்து கொண்டிருந்த அவர் பின்பு அருகில் இருந்த பாறையின் மேல் நின்று கொண்டு வீடியோ எடுப்பதற்கு முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் 115 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டார். பின்னர் ஒரு கயிற்றை கெட்டியாக பிடித்துக் கொண்டார். இதைதொடர்ந்து அவருடைய நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றபோதிலும் எதிர்பாராத விதமாக மீண்டும் அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள் காவல்துறையினரிடம் இச்சம்பவத்தை பற்றி தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை தேடி வருகின்றனர். இதற்கிடையே இச்சம்பவத்தை பற்றியான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்று சமீபத்தில் நீர்வீழ்ச்சிக்கு அருகில் இருந்து ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்ற பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரீல்ஸ் விடியோக்கள் எடுக்கும் ஆசையில் இளைஞர்கள் பலர் விபரீதமான செயல்களில் ஈடுபடுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.