ரிஷபம் ராசிக்கு…சிந்தித்து செய்லபடுங்கள்… புதிய அனுபவம் கிடைக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் ஞானம் நிறைந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். இன்று பெறுகின்ற அனுபவம் புதிதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். இன்று தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறைந்து, நல்ல முன்னேற்றம் இருக்கும் . ஆனால் சிந்தித்து சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிலும் நல்ல பலனை நீங்கள் அடைய முடியும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த கெடுபிடிகள் குறைந்து நிம்மதியான மனநிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். இன்றைய நாள் ஓரளவு சிறப்பு மிக்க நாளாகவே இருக்கும். கூடுமானவரை பொறுமையுடனும், நிதானத்துடனும் எப்பொழுதுமே இருப்பதற்கு பழகிக் கொள்ளுங்கள், அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,

மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். அனைத்து காரியங்களும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்