தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற போது சென்னை அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி யார் அந்த சார் என்று கேட்டால் அஞ்சு நடுங்குவது ஏன் என்று கேட்டார். அப்போது குறிப்பிட்ட சபாநாயகர் ஏற்கனவே இது பற்றி சட்டசபையில் விவாதம் முடிந்துவிட்ட நிலையில் அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் வழங்கியதால் அதைப் பற்றி பேச வேண்டாம் என்று கூறினார். அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வு கவர்னருக்கு எதிரான போராட்டம் என அடுத்த அடுத்த பல கேள்விகளை கேட்க முதல்வர் ஸ்டாலினும் பதில் கூற காரசார விவாதம் நடைபெற்றது.

அந்த சமயத்தில் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் அரசியல் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என்று கேட்டார். முன்னதாக 2020 ஆம் ஆண்டு திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் செய்வதாக திமுகவை பார்த்து கேட்ட நிலையில் அதற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என்று பதிலடி கொடுத்தார். தற்போது அவருடைய பதிலை அவருக்கே திரும்ப கொடுத்து சட்டசபையை எடப்பாடி பழனிச்சாமி அதிர வைத்துள்ளார்.