கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் கொலை வழக்கில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என அம்மாவட்ட எஸ்பி சரோஜ் குமார் தாகூர் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் சின்னசாமி ராணுவ வீரர் பிரபுவை அடித்து கொன்ற சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மோதிக்கொண்ட இரு தரப்பினரும் நெருங்கிய உறவினர்கள். சில அரசியல் கட்சிகள், திட்டமிட்டு பொய் பிரச்சாரமும், சமூக வலைதளங்களில் வதந்தியும் பரப்பி வருகின்றனர். அப்படி செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.