கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நிலசரிவு ஏற்பட்ட நிலையில் இதில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஆறாவது நாளாக இன்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நிலச்சரிவில் சிக்கிய உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 கடந்துள்ளது.

இந்த நிலையில் வயநாட்டில் இந்திய ராணுவம் மேற்கொண்ட மீட்பு பணிகள் குறித்து கேரளாவை சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த கடிதத்தில், அன்புள்ள இந்திய ராணுவமே, எனது அன்புக்குரிய வயநாடு மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி மிகப்பெரிய அழிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை நீங்கள் மீட்பதை கண்டு பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன், Big சல்யூட் என்று தெரிவித்துள்ளார்.