ராட்சசி உருவத்தில் துஷ்ரா விஜயன்…. “நட்சத்திரம் நகர்கிறது” படத்தின் புதிய அப்டேட்…. வைரல்….!!

தமிழ் சினிமாவில் அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இவர் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து முன்னாடி இயக்குனராக உயர்ந்துள்ளார். இவர் தற்போது “நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருகிறது. இப்படத்தை காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கலையரசரன், ஹரி கிருஷ்ணன், ஷபீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இப்படத்தை நீலம் ப்ரொடக்ஷன் மற்றும் யாழினி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் ராட்சசி போன்ற உருவத்தை கொண்ட துஷ்ரா விஜயனின் நீல நிற கூந்தலில் கதாபாத்திரங்கள் அனைவரும் அமைந்திருக்கும் வகையில் இந்த போஸ்டர் உள்ளது மேலும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *