ராஜமௌலியின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கும் விக்ரம்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

ராஜமௌலி அடுத்ததாக இயக்கும் படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் ராஜமௌலி. அடுத்ததாக இவர் இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளது.

இதை தொடர்ந்து ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *