“ராசி பார்க்கும் அஜித்”… இப்படித்தான் இயக்குனரை தேர்வு செய்வாராம்…. வினோத காரணத்தை சொன்ன பிரபலம்…!!!

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் ஆக வலம் வரும் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த மாதம் துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் நிலையில், மகிழ் திருமேனி படத்தை இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.‌ இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் அஜித் தான் நடிக்கும் படங்களின் இயக்குனரை எப்படி தேர்வு செய்வார் என்பது குறித்து ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.

அதாவது நடிகர் அஜித் ஒரு இயக்குனரை சந்தித்த பிறகு 10 நாட்களுக்கு பிறகு பேசுகிறேன் என்று அவரை அனுப்பி விடுவாராம். அந்த 10 நாட்களில் நடிகர் அஜித்துக்கு நல்ல விஷயங்கள் நடந்தாலோ அல்லது தவறான விஷயங்கள் எதுவும் நடைபெறாமல் இருந்தாலோ அந்த இயக்குனரின் படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்து விடுவாராம். ஒருவேளை ஏதேனும் தவறான விஷயங்கள் நடந்தால் அது எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் அவருடைய படத்தில் நடிக்க மாட்டாராம். மேலும் நடிகர் அஜித் ராசி பார்த்து தான் ஒரு இயக்குனரை தேர்வு செய்வார் என்று மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.