ரஷ்ய எரிவாயு நிறுத்தம்!…. பாதிக்கப்படும் மில்லியன் கணக்கான பணியாளர்கள்…. லீக்கான தகவல்….!!!!!

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மில்லியன் கணக்கான பணியாளர்கள் வேலைஇழக்கும் அபாயமானது உருவாகியிருப்பதாக ஜெர்மனி நாட்டின் பவேரிய மாகாணம் பிரீமியர் Markus Soder தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறியதாவது , நாட்டின் நிர்வாக அமைப்பு, ரஷ்யஎரிவாயு திடீரென்று நிறுத்தப்படும் நிலைக்கு போதுமான அளவில் தயாராக இருக்கவில்லை எனவும் குளிர்காலத்தில் எரிவாயுவுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். ஆற்றலுக்கு அவசரநிலை உருவாகும் ஒரு அபாயம் இருப்பதாக தெரிவிக்கும் அவர், அதன் விளைவாக பல்வேறு மில்லியன் பணியாளர்கள் பாதிக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.

சேன்ஸலர் ஓலாப் ஷோல்ஸின் அரசை கடுமையாக விமர்சித்துள்ள அவர், அரசு ஆற்றலுக்கு மாற்று ஏற்பாடு செய்வதற்கு நீண்டகாலம் எடுத்துக் கொள்வதாகவும் ரஷ்யா ஜெர்மனிக்கு வழங்கும் எரிவாயுவை மெதுவாகவும், படிப்படியாகவும், மொத்தமாகவும் நிறுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளார். எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் குளிர்காலத்தில் கடுமையான அவதியுறும் அபாயம் இருக்கிறது என்று கூறும் Soder, அணுமின் நிலையங்கள் தொடர்ந்து செயல்படவேண்டும் எனவும் புதியதாக எரிவாயு வளங்களைக் கண்டுபிடிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.