உத்திரபிரதேச மாநிலத்தில் அல்கா என்ற 42 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் ஒரு ரவுடியை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் அல்காவுக்கு தெரிய வந்த நிலையில் பலமுறை தன்னுடைய மகளை காதலை கைவிடுமாறு கூறி கண்டித்துள்ளார். ஆனால் மகள் கேட்காததால் ஆத்திரத்தில் தன் மகளை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக கூலிப்படை தலைவனுக்கு பணம் கொடுத்து தன் மகளைக் கொல்லுமாறு அவர் கூறியுள்ளார்.

அங்குதான் சம்பவமே இருக்கிறது. அதாவது தன்னுடைய மகளை கொல்லுமாறு அவர் கூலிப்படை தலைவனுக்கு பணம் கொடுத்த நிலையில் அந்த கூலிப்படை தலைவனை தான் அவருடைய மகள் காதலித்து வந்துள்ளார். தன்னுடைய தாய் தன் காதலனுக்கே பணம் கொடுத்து தன்னை கொலை செய்யுமாறு கூறியது சிறுமிக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் தன் காதலனுடன் சேர்ந்து தாயை தீர்த்து கட்டினார். மேலும் இதுகுறித்த சம்பவம் தெரிய வந்த நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கூலிப்படை தலைவனை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.