ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்திற்கு 5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒடிசாவில் ரயில் விபத்து காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒரு நாள் துக்க நாள் அனுசரிக்கப்படும் என்ற முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த கோர விபத்தில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 900 மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மத்திய அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு இரண்டு லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.