ரயில் பயணிகள் கவனத்திற்கு….வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம்….வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை ரயில்வே கோட்டத்தில், ரயில் பாதை பராமரிப்பு பணிகளானது நேற்று (ஜூன் 22) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இதன் காரணமாக ஜூன் 22-ம் தேதி (நேற்று), அதிகாலை 05.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்படுகின்ற , காரைக்குடி – சென்னை எழும்பூர் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 01.50 மணிக்கு புறப்படும் சென்னை – மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில், செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், சென்னை கோட்டத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட , ரயில் பாதை பராமரிப்பு பணிகளானது, மற்றொரு நாளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இதனால் பல்லவன் மற்றும் வைகை விரைவு ரயில்கள், வழக்கம்போல் இயங்கும். இவ்வாறு தெற்கு ரயில்வே, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *