முன்பதிவு ரயில்களில் மோசடி நடைபெறுவதை தடுக்க பயணிகளிடம் டிக்கெட் உள்ளதா என்பதை சோதிக்க டிக்கெட் பரிசோதகருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே டிக்கெட் சோதனையை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு பிறகு சோதனை நடத்த அவருக்கு ரயில்வே விதி அனுமதி தரவில்லை. அதற்கு முன்பே டிக்கெட் பரிசோதனை நடத்திவிட வேண்டும் என்று ரயில்வே விதிகள் அறிவுறுத்தியுள்ளது.