நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. என் நிலையில் 5 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து ரயில்களில் முதல் ரயில் ஒடிசாவில் பூரி மற்றும் ஹௌரா வழித்தடத்தில் தொடங்கும். அதனைத் தொடர்ந்து தென்கிழக்கு ரயில்வேயில் இரண்டாவது ரயில் புதிய ஜல்பைகுறி குவாத்தி வழித்தடத்தில் அதிவேக ரயில் தொடங்கும்.

வடகிழக்கு இந்தியாவில் தொடங்கப்படும் ரயிலின் முதல் யூனிட் இதுவாகும். இதற்குப் பிறகு பாட்னா மற்றும் ராஞ்சி வழித்தடத்தில் முன்கூட்டியே ரயிலை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை -மைசூர், சென்னை மற்றும் கோவை வழித்தடத்தில் வந்தே பாரத் இயங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.