ரயில் பயணத்தின்போது நாம் எடுத்து செல்லக்கூடாதவை குறித்து இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். ரயிலில் ஆசிட் அதாவது எவ்விதமான அமிலத்தையும் கொண்டு போக இயலாது. அப்படி செய்தால் அதற்கு நீங்கள் அபராதம் செலுத்தவேண்டி இருக்கும். பயணிகளின் பாதுகாப்பை கருதி இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக parcel.indianrail.gov.in இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து பல்வேறு நேரங்களில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கேஸ் சிலிண்டரை எடுத்து செல்ல ரயிலை ஒரு நல்ல வழியாக கருதுகிறோம். எனினும் அப்படி செய்வது தவறான ஒன்று. இந்திய ரயில்வேயில் சமைக்கப்படாத இறந்த கோழிகளை எடுத்துச் செல்லவும் அனுமதியில்லை. இறந்த கோழிகளால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இது ரயில் பயணிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அதோடு பல்வேறு நோய்களும் பரவக்கூடும். பயணிகளின் பாதுகாப்பை கருதி ரயிலில் பட்டாசுகளை கொண்டு போகவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.