தமிழ் சினிமாவில் வெளியான வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களுக்கு கதை மற்றும் வசனம் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி தற்போது ரயில் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்திற்கு முதலில் வடக்கன் என்று தலைப்பிடப்பட்ட நிலையில், தலைப்பிற்கு பெரும் சர்ச்சைகள் கிளம்பியதால் ரயில் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த படத்தில் குங்குமராஜ் மற்றும் வைரமாலா இருவரும் அறிமுகமாகியுள்ளனர். இந்த படம் தமிழ்நாட்டில் புலம்பெயரும் வட மாநில தொழிலாளர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லர் வீடியோ ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படம் ஜூன் 21ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.