ரயில் தடம் புரண்டு கோர விபத்து… 36 பேர் உயிரிழந்த சோகம்… அதிர்ச்சி…!!!

கிழக்கு தைவானில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 36 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தைவானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. டைதுங் நோக்கி பயணித்த அந்த ரயில் ஒரு சுரங்கப் பாதையின் தண்டவாளத்தில் இருந்து இறங்கி சுரங்கப் பாதையும் சுவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

அந்தக் கோர விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் விபத்தில் படுகாயமடைந்த 70 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த விபத்து பற்றி அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.