ரயில்வே பாதையில் சண்டையிட்ட இளைஞர்கள்…. கண் இமைக்கும் நேரத்தில் உயிர் தப்பிய காட்சி…. திக் திக் நிமிடங்கள்…!!

அர்ஜெண்டினா ரயில்வே பாதையில் இளைஞர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்த அதிர்ச்சியளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

அர்ஜெண்டினாவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து மது அருந்துவதற்காக கடைக்கு சென்று உள்ளனர். அப்போது மதுபான கடையில் வைத்து இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 20 இளைஞர்கள் மதுபான கடையில் இருந்து சண்டை போட்டுக்கொண்டே அருகில் உள்ள ரயில் பாதைக்கு வந்துள்ளனர். அங்கு ரயில் வரும் என்று துளி கூட பயம் இல்லாமல் அந்த இளைஞர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். அச்சமயம் ரயில் பாதையை வேகமாக கடந்த ரயிலில் மோதாமல் இளைஞர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் தப்பியுள்ளனர்.

இதனை கண்ட அப்பகுதி பெண்கள் சிலர் சண்டையை  விலக்கி வைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் இளைஞர்கள் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளனர். இதனால் ரயில்வே ஊழியர்கள் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்காக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த இளைஞர்களை விரட்டியடித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.